Home உலகம் சிரியா அதிபர் இரசாயன தாக்குதலுக்கு உத்தரவிட்டார்: ஜெர்மனி உளவு நிறுவனம்

சிரியா அதிபர் இரசாயன தாக்குதலுக்கு உத்தரவிட்டார்: ஜெர்மனி உளவு நிறுவனம்

659
0
SHARE
Ad

பெர்லின், செப் 5- சிரியா உள்நாட்டு போரில் அதிபரின் படையினர் தங்கள் பலத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விஷ வாயுக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சிரியா அதிபர் கடந்த மாதம் உத்தரவிட்டார் என்று ஒரு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஜெர்மனி உளவு நிறுவனம் கூறியுள்ளது.

AP_syria_bashar_al_assad_lpl_130829_16x9_992மேலும் இந்த தகவலானது சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானியன் தூதரகத்திற்கும் ஷியா பிரிவினரின் தீவிரவாத அமைப்பான லெபனன் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற போன் உரையாடலை வழிமறித்து கேட்டதன் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது என்றும் அந்த உளவு அமைப்பு கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

அப்போது ஈரானிய தூதரக அதிகாரிகளிடம், அதிபர் ஆசாத் விஷவாயு தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா அமைப்பிடம் கேட்க வேண்டியதாகவும் அது கூறியுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் வெளிநாட்டு இரகசிய உளவு நிறுவனம் மூலம் தங்களுக்கு கிடைத்ததாகவும், மேலும் மிகவும் முக்கியமான இந்த விஷயம் குறித்து விவரமாக செய்திகள் வெளியிடமுடியாது என்றும் ஜெர்மனி உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

1400-க்கும் மேற்பட்டோரை சரின் விஷக்குண்டுகளை வீசி கொன்றுவிட்டதாக கூறி சிரியா மீது போர் தொடுக்க ஆயுத்தமாகி வரும் அமெரிக்காவிற்கு ஜெர்மனியின் இந்த தகவல் வலுவூட்டும் என்று கூறப்படுகிறது.