Home நாடு சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு மலேசியா எதிர்ப்பு!

சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு மலேசியா எதிர்ப்பு!

452
0
SHARE
Ad

anifah_aman5புத்ர ஜெயா, செப்டம்பர் 5 – டமாஸ்கர் நகரின் அருகே ரசாயன குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களை கொன்றதாக கூறி, சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அதற்கு மலேசியா சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனீஃபா அமான்(படம்) கூறுகையில், “ எந்த ஒரு நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதை மலேசியா ஆதரிக்காது. எங்களுடைய நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் எந்த ஒரு பிரச்சனையையும் அமர்ந்து பேசினால் அதற்கான சுமூகத் தீர்வைக் காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஏற்கனவே ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்ட லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் என்ன நேர்ந்தது எனபது நமக்கு நன்றாகத் தெரியும். எனவே இப்பிரச்சனைக்கு சிரியா நாட்டு மக்களே அவர்களின் தலைவிதி என்வென்பதை தீர்மானிக்கட்டும்” என்றும் அனிஃபா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதேநேரத்தில், எந்த காரணத்திற்காகவும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மலேசியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அதற்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அனீஃபா கூறியுள்ளார்.

சிரியாவில் வாழும் 17 மலேசியர்கள் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அங்கேயே வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளதை அனீஃபா உறுதிபடுத்தினார்.