Home அரசியல் ரகசிய கும்பலுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டனர் – சாஹிட்

ரகசிய கும்பலுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டனர் – சாஹிட்

527
0
SHARE
Ad

zahidhகோத்தா கினபாலு, செப்டம்பர் 5 – குண்டர் கும்பலுடன் ரகசிய தொடர்புடைய அரசியல் தலைவர்களை தீவிரமாக காவல்துறை கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அந்த குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய சாஹிட், அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

“இதற்கு முன்னர் அது போன்ற ரகசிய கும்பலுடன் தொடர்புடைய அந்த அரசியல் தலைவர்கள், இப்போது திருந்தியிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களது பெயரை வெளியிடுவது நியாயமில்லை. இருந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒருவேளை இன்னும் அவர்களுக்கு ரகசிய கும்பல்களுடன் தொடர்பு இருப்பின் அவர்களை சட்டத்திற்கு முன் கட்டாயம் நிறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குற்றத்தடுப்பு சட்டம் 1959 பிரிவை திருத்தம் செய்வது குறித்து வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கவுள்ளது குறித்து சபா, சரவாக் மாநிலங்களில் இப்போதே பல கருத்துக்கள் நிலவுகிறது என்றும், இந்த சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டால் சபா, சரவாக் காவல்துறைக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான அதிகாரம் அதிகப்படுத்தப்படும் என்றும் சாஹிட் கூறியுள்ளார்.