Home கலை உலகம் விஷாலின் மதகஜராஜா படத்துக்கு சிக்கல்: வெளியீடு தேதி தள்ளிவைப்பு

விஷாலின் மதகஜராஜா படத்துக்கு சிக்கல்: வெளியீடு தேதி தள்ளிவைப்பு

651
0
SHARE
Ad

செப். 6- தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மோதலால் மதகஜ ராஜா படம் இன்று வெளியிடுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஷால் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்துள்ளனர். சுந்தர். சி இயக்கியுள்ளார்.

இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பு கடந்த ஜனவரியிலேயே முடிந்து விட்டது.

#TamilSchoolmychoice

பொங்கல், தமிழ்புத் தாண்டு என எதிர்பார்த்தும் படம் வெளியாகவில்லை. நிதி நெருக்கடியால் தள்ளிப் போவதாக கூறப்பட்டது. இறுதியாக இன்று (6–ந்தேதி) வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

mgrஅதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. திரையரங்குகளின் சீட்டுக்கு முன்பதிவு நடந்தது.

இதற்கிடையே மதகஜ ராஜா படத்தை பெரும் தொகைக்கு விலைபேசி விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் வெளியிட வாங்கி விட்டார். இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தயாரிப்பு நிறுவனமான ஜெமினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் வெளியீடு செய்யக் கூடாது என்று விநியோகஸ்தர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு தரப்பினருக்கும் இரு தினங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்கிறது.

குஷ்பு தனது டுவிட்டரில் மதகஜராஜா படம் ஒரு நாள் தாமதமாக நாளை  (7–ந்தேதி) வெளியாகும் என குறிப்பிட்டு உள்ளார்.

விஷாலுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.

செப்.7-ம் தேதி பிரபல தயாரிப்பாளர் இராம.நாராயணன் இயக்கத்தில் உருவான ‘ஆர்யா- சூர்யா’ என்ற படமும்  வெளியாகிறது.