மாஸ்கோ, செப் 6- ரஷ்யாவில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று ரஷ்யா வந்தார்.
அப்போது செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சிரியா குறித்து அவர் கூறியதாவது:-
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு போர்டன் டவுன் ஆய்வுக்கூடத்தில் சோதனை நடைபெறுகிறது.
அப்பகுதியில் எடுக்கப்பட்ட துணிகள் மற்றும் மண்ணில் சரின் விஷவாயு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
சிரியா விவகாரத்தில் நான் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளவில்லை. மேலும் சிரியா அகதிகளுக்கு உதவவும், அங்கு அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.