Home இந்தியா ஐ.நா. சபையில் 28-ந்தேதி மன்மோகன்சிங் பேசுகிறார்

ஐ.நா. சபையில் 28-ந்தேதி மன்மோகன்சிங் பேசுகிறார்

546
0
SHARE
Ad

நியூயார்க், செப்.6- நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபை கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது.

Manmohan_Singh_1122023fஇந்தக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிற தலைவர்களின் தற்காலிக பட்டியல் ஏற்கனவே வெளியானது.

அதில் பிரதமர் மன்மோகன்சிங், வரும் 27-ந் தேதி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்க வசதியாக பிரதமர் மன்மோகன்சிங் 28-ந்தேதி ஐ.நா. பொதுசபையில் பேச இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை தொடர்ந்து, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் 27-ந்தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அதில் இரு தரப்பு பொது உறவை வலுப்படுத்தும் அம்சங்கள், வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம்பெறும்.