Home உலகம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பதவிக்காலம் முடிவடைந்து விடைபெற்றார்

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பதவிக்காலம் முடிவடைந்து விடைபெற்றார்

658
0
SHARE
Ad

இஸ்லாமாபாத், செப்.9- பாகிஸ்தானின் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவிக்காலம்  நேற்றுடன் முடிவடைந்தது.

மோசமான பாதுகாப்பு மற்றும் நலிவடைந்த பொருளாதார நிலைமை ஆகியவற்றிலும் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை சர்தாரி நிறைவேற்றியுள்ளார்.

58 வயதான சர்தாரி மறைந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவராவார்.

#TamilSchoolmychoice

6-19-2013_23592_l_Tஇஸ்லாமாபாத்திற்கு வெளியே மர்கல்லா மலையை ஒட்டியுள்ள அதிபர் இல்லத்திலிருந்து நேற்று  மாலை அவர் லாகூருக்குப் புறப்பட்டார்.

கிளம்பும்முன்,பாதுகாப்பு அதிகாரிகளின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட இவர் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றார்.

எப்போதுமே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்த சர்தாரியின் பதவிக்காலம் அவருக்குப் பிரபல்யத்தைத் தரவில்லை. மனைவி இறந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய பதவிக்காலம் முடித்து பணி ஓய்வு பெறும் சர்தாரி, பாகிஸ்தானிலும் துபாயிலுமாக மீதி நாட்களைக் கழிப்பார் என்று கூறப்படுகின்றது.

இவருக்கு அடுத்து அதிபர் பதவியினை ஏற்கும் மாமூன் ஹுசைன் வரும் திங்களன்று பதவி ஏற்க உள்ளார். தொழிலதிபராக உள்ள ஹுசைன், பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு நெருங்கியவர் ஆவார்.

இதைத்தவிர, தனிப்பட்ட அதிகார அடிப்படை மற்றும் ஆளுமை போன்ற எதுவும் இல்லாதது சர்தாரியிடமிருந்து இவரை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்.