செப். 12- நடிகை நமீதா சமூக சேவை பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.
கண்தானம், ரத்ததான முகாம், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
சமீபத்தில் கண் தானத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திலும் பங்கேற்று நடந்து சென்றார்.
சமூக சேவை அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பணம் வாங்காமல் பங்கேற்று அவர்களை ஊக்குவிக்கும் நமீதாவின் நடவடிக்கைகளை விழாக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
வெளி நாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் உள்ளன. அவற்றை பார்த்த நமீதா நம்மூரிலும் அதுபோல் அமைக்க ஆசைப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு கழிப்பிடத்தை அமைத்து திறந்தும் வைத்தார்.
தன்னார்வதொண்டு அமைப்பினர் இதற்கு உதவினால் சென்னை நகரின் தெருக்கள் முழுவதிலும் இது போன்ற பெண்கள் கழிப்பிடங்களை உருவாக்க திட்ட மிட்டார். ஆனால் யாரும் முன்வரவில்லை. சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபடுவது அரசியலில் ஈடுபடுவதற்காகவா என்று நமீதாவிடம் கேட்ட போது ஆமாம் என்றார்.
எனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் உள்ளது. நல்ல அரசியல் கட்சியோன்றில் சேர விரும்கிறேன். அதற்கான வாய்ப்பு கிட்டினால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லா விட்டால் சமூக சேவை பணிகளை தொடர்ந்து செய்வேன் என்றார்.