Home நாடு 4 வது அனைத்துலக வர்த்தக மாநாடு: நஜிப்பின் அழைப்பை ஏற்று ஒபாமா மலேசியா வருகிறார்!

4 வது அனைத்துலக வர்த்தக மாநாடு: நஜிப்பின் அழைப்பை ஏற்று ஒபாமா மலேசியா வருகிறார்!

554
0
SHARE
Ad

najib-n-obamajpgகோலாலம்பூர், செப் 12 – வரும் அக்டோபர் 11 ம் தேதி கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கும் நான்காவது அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (4th Global Entrepreneurship Summit) பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்ளவிருக்கிறார்.

இது குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறுகையில்,

“ 1 Malaysia Enterpreneurship எனும் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சு, இளம் தொழில் முனைவர்களையும், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுடைய இளைஞர்களையும் பராக் ஒபாமா கலந்து கொள்ளும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்யும்”

#TamilSchoolmychoice

“மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தயார்படுத்தும் வகையில் முன்னதாக Boot Camp 2013 எனப்படும் தொழில் பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும்.www.1met.org எனும் அகப்பக்கத்தில் இதற்கான மனுபாரங்கள் உள்ளன. 18 வயது முதல் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் மட்டுமே மனு செய்யலாம்”

“கோலாலம்பூர், பினாங்கு, குவாந்தான், ஜோகூர், சபா, சரவா ஆகிய இடங்களில் நடத்தப்படும் பட்டறையில் வர்த்தகம் குறித்த நுட்பங்களும், வர்த்தக வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து ஆன்லைன் முறையில் மனு செய்ய வேண்டும்” என்று சரவணன் தெரிவித்தார்.