Home உலகம் ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ரஷிய அதிபர் புதினை சித்தரித்து கதாபாத்திரம்- நஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு

ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ரஷிய அதிபர் புதினை சித்தரித்து கதாபாத்திரம்- நஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு

602
0
SHARE
Ad

மாஸ்கோ, செப். 12– ஹாரிபாட்டர் சினிமாவில் ரஷிய அதிபர் புதினை சித்தரித்து கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி நஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

putin220103‘ஹாரிபாட்டர்’ என்ற கதை பல பாகங்களாக திரைப்படமாக  படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அமோகமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. அதில், ‘டோப்பி’ என்ற ஒரு கதாபாத்திரம் உள்ளது.

tumblr_lxsvjafXp81r45sf7o1_500வழுக்கை தலை, கூர்மையான மூக்கு, மின்னும் கண்கள், தளர்ந்து தொங்குகிற பெரிய காதுகள் என அவற்றின் உடல் உறுப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

அந்த உருவம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

‘ஹாரிபாட்டர்’ திரைப்படங்களை  ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் விலைக்கு வாங்கி வினியோகம் செய்து வருகிறது.

எனவே, இந்த நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.