Home நாடு உத்துசானில் அதிக விளம்பரம் செய்யுங்கள் – அரசுத் துறைகளுக்கு நஜிப் வலியுறுத்து

உத்துசானில் அதிக விளம்பரம் செய்யுங்கள் – அரசுத் துறைகளுக்கு நஜிப் வலியுறுத்து

589
0
SHARE
Ad

Najib-Razak-aகோலாலம்பூர், செப் 14 – அம்னோவின் ஆஸ்தான பத்திரிக்கையான உத்துசான் மலேசியாவில் அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி) அதிகளவு விளம்பரங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய காலத்திலும் அந்த 75 ஆண்டுகால பத்திரிக்கை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் இது போன்ற விளம்பரங்கள் அவசியம் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

உத்துசானின் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நஜிப், “ஜாலான் சான் செள லின், ஜாலான் எனாமில் உத்துசானின் புதிய தலைமையகக் கட்டிடம் அமைந்துள்ள சாலை ஜாலான் உத்துசான் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்” என்று நஜிப் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஜாலான் எனாம் என்றால் எந்த அர்த்தமும் இல்லை தானே? அதனால் இதை ஜாலான் உத்துசான் என்று மாற்றுவோம்” என்று நஜிப் தெரிவித்தார்.