Home அரசியல் வணிக ரீதியில் உத்துசானை மீட்க நஜிப் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் – டோனி புவா குற்றச்சாட்டு

வணிக ரீதியில் உத்துசானை மீட்க நஜிப் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் – டோனி புவா குற்றச்சாட்டு

519
0
SHARE
Ad

tony pua featureகோலாலம்பூர், செப் 14 –  நாட்டில் கடுமையான நிதி பற்றாக்குறை என்று கூறி பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 20 காசு உயர்த்திய பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு, அரசு விளம்பரங்களை அம்னோவின் சொந்த பத்திரிக்கையான உத்துசானிடம் கூடுதலாக வழங்குமாறு வலியுறுத்துவது ‘வீண் செலவு’ என்று தெரியவில்லையா? என்று ஜசெக கட்சியைச் சேர்ந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.

நஜிப் இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம் உத்துசான் பத்திரிக்கை வணிக ரீதியாக தொய்வடைந்திருப்பது தெரிகிறது. அதனால் தான் பிரதமர் தங்களது இனவாதம் நிறைந்த மற்றும் மிகைப்படுத்திக் கூறும் பத்திரிக்கையான உத்துசானை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்றும் டோனி புவா கூறியுள்ளார்.

மேலும், அம்னோவின் தலைவரான நஜிப், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்தை தங்களது கட்சி பத்திரிக்கைக்கு ஆதரவு தரும்படி கூறியிருக்கிறார் என்றும் டோனி புவா குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று உத்துசான் மலேசியாவின் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய நஜிப், அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி) உத்துசானில் அதிகளவு விளம்பரங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில், ஜாலான் சான் செள லின், ஜாலான் எனாமில் உத்துசானின் புதிய தலைமையகக் கட்டிடம் அமைந்துள்ள சாலை ஜாலான் உத்துசான் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதையும் நஜிப் குறிப்பிட்டார்.