கோலாலம்பூர், செப் 15 – நாட்டில் பூமி புத்ராக்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்தும் நோக்கில், அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஷா ஆலமில் உள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அங்கு கூடியிருந்த 2000 பேர் முன்பு அறிவித்தார்.
கடந்த மே 5 பொதுத்தேர்தலில் மலாய் மக்கள் மற்றும் பூமி புத்ராக்கள் கொடுத்த ஆதரவிற்கு கைமாறாக, தான் இதை செய்வதாகவும் நஜிப் அறிவித்தார்.
“இதை பூமிபுத்ராக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நடவடிக்கைகள் என்று கூறலாம். இதன் மூலம் மலாய் மக்கள் மற்றும் பூமி புத்ராக்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளலாம். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பூமிபுத்ராக்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து பல்வேறு குறைகளைக் கூறினார். அவர்கள் கூறியது எங்களது காதுகளில் தெளிவாகக் கேட்டது” என்று நஜிப் தெரிவித்தார்.