Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு II: நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கர்பால் சிங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

ஓரினப்புணர்ச்சி வழக்கு II: நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கர்பால் சிங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

509
0
SHARE
Ad

anwarkarpal-642x427கோலாலம்பூர், செப் 17 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓரினப்புணர்ச்சி (II) மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதி தெங்கு மைமூன் துவான் மட் விசாரணை செய்யக்கூடாது என்று அன்வாரின் சட்ட ஆலோசனைக் குழுத் தலைவரான கர்பால் சிங் விடுத்த கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

வேறு நீதிபதி மாற்றம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று மனுவை விசாரணை செய்த மூவர் அடங்கிய நீதிக்குழுவின் தலைவரான நீதிபதி ரம்லி அலி தெரிவித்தார்.

அத்துடன், முகமட் சஃபி அப்துல்லா அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தடை செய்யக் கோரும் மனுவும் நாளை விசாரணை செய்யப்படும் என்று ரம்லி அறிவித்தார்.

#TamilSchoolmychoice