Home நாடு சின் பெங்கின் அஸ்தி கூட மலேசியாவிற்குள் நுழையக்கூடாது – சாஹிட் கருத்து

சின் பெங்கின் அஸ்தி கூட மலேசியாவிற்குள் நுழையக்கூடாது – சாஹிட் கருத்து

595
0
SHARE
Ad
1-cpi

கோலாலம்பூர், செப் 17 – முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சின் பெங் பேங்கோக்கில் நேற்று காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் பிறந்த நாடான மலேசியாவிற்கு கொண்டு வரக்கூடும் என்பதால் அதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

“சின் பெங்கில் உடல் கடத்தப்பட்டு மலேசியாவிற்குள் கொண்டுவரப்படலாம் என்பதால் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது” என்று தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் நேற்றிரவு தனது டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சின் பெங்கின் உடலை அவரது சொந்த ஊரான பேராக் மாநிலம் சித்தியவானில் புதைக்க, பிரதமர் நஜிப் துன் ரசாக் அனுமதியளிக்க மறுத்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் சின் பெங்கில் தோழரான ஃபாங் சான் கூறுகையில், தனது சொந்த ஊரான பேராக் மாநிலம் சித்தியவானில் தான் தனது அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பது சின் பெங்கின் விருப்பம் என்று தெரிவித்தார்.

இருப்பினும், உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, சின் பெங்கின் அஸ்தி கூட மலேசிய மண்ணில் படக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி,  கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்கு திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய புத்ரஜெயா தடை விதித்தது.

அதனால் தனது வாழ்நாளில் பல வருடங்களை சின் பெங் தாய்லாந்திலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.