Home கலை உலகம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் காயத்ரி ரகுராம்

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் காயத்ரி ரகுராம்

938
0
SHARE
Ad

Gayatri-Raghuramசெப். 17 நடன இயக்குனர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம்.

தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பின்னர் அமெரிக்காவில் பொறியியலாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு அங்கே வாழ்ந்தார்.

பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்படவே, அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

திரும்பிய அவர் ‘கந்தசாமி’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

1இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் விவேக், இயக்குனர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.