Home கலை உலகம் பிக் பாஸ்: காயத்ரி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ்: காயத்ரி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

832
0
SHARE
Ad

Gayathiri1bigbossசென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காயத்ரியை கமல்ஹாசன் பேட்டி கண்டார். இருப்பினும், தான் காயத்ரிக்கு ஆதரவாக இருப்பதாகப் புகார்கள் எழுந்திருப்பதால், காயத்ரியை நோக்கி நிகழ்ச்சியை நேரில் கண்டு கொண்டிருந்த இரசிகர்களே கேள்வி கேட்பார்கள் என கமல் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காயத்ரி இரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பின்னர் வெளியேறும் முன்னர் கமலுடன் ஆட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய காயத்ரியுடன் கமல் “ரம்..பம்..பம்..ஆரம்பம்” என்ற பாடலுக்கு சில நிமிடங்கள் ஆடினார்.

#TamilSchoolmychoice

இந்தக் காட்சிகளை இன்று திங்கட்கிழமை அஸ்ட்ரோ 224 அலைவரிசையில் ஒளியேறும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

-செல்லியல் தொகுப்பு