Home கலை உலகம் கணவருடன் சமரச தீர்வு காண நடிகை யுக்தா முகிக்கு நீதிமன்றம் ஆலோசனை

கணவருடன் சமரச தீர்வு காண நடிகை யுக்தா முகிக்கு நீதிமன்றம் ஆலோசனை

542
0
SHARE
Ad

coupleyukta-jpg_084601செப். 18- கணவருடன் சமரச தீர்வு காணுமாறு நடிகை யுக்தா முகிக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நடிகையும் முன்னாள் உலக அழகியுமான யுக்தா முகி நாக்பூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ் துலியை காதலித்து கடந்த 2008–ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவரை பிரிந்து யுக்தாமுகி தனது மகனுடன் மும்பையில் உள்ள பெற்றோருடன் வசித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

36 வயதாகும் யுக்தாமுகி கணவர் மீது கடந்த மே மாதம் 16–ந்தேதி மும்பை போலீசில் புகார் செய்தார்.

அதில் கணவர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் துலி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து துலி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் மும்பை செசன்ஸ்  நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை கைது செய்யவும் தடை விதித்தது.

yukta_350_070513100848நேற்று இந்த வழக்கு நீதிபதி சாதனா ஜாதவ் விசாரணைக்கு வந்தது. அப்போது யுக்தா முகி கணவருடனான பிரச்சினைகளை அவசரமாக பேசி தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார்.

நீதிமன்றத்தில்  இருவர் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். வருகிற 30–ந்தேதி கணவன்– மனைவி இருவரும் நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

யுக்தா முகி கடந்த 1999–ல் உலக அழகி பட்டம் வென்றார். அப்போது அவருக்கு வயது 22. தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அஜீத்துடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.