Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): தனியார் வழக்கறிஞர் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது – கர்பால் சிங்

ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): தனியார் வழக்கறிஞர் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது – கர்பால் சிங்

565
0
SHARE
Ad

anwarkarpal-642x427கோலாலம்பூர், செப் 18 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி (II) வழக்கில் தலைமை வழக்கறிஞர் மன்றத்தில் தனியார் வழக்கறிஞர் ஒருவரின் சட்டப்பூர்வ நியமனம் குறித்து மூத்த வழக்கறிஞரான கர்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வழக்கில் அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட தனியார் வழக்கறிஞரான முகமட் சஃபி அப்துல்லாவிற்கு எதிராக, கர்பால் சிங் மனுத் தாக்கல் செய்தார்.

அதில் 1998 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் பிரிவு 378, குற்றவியல் நடைமுறை குறியீடு (Criminal Procedure Code ) ன் படி இந்த நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே இவ்வழக்கு விசாரணைக்கு நியமனம் செய்யப்பட்ட நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கர்பால் சிங் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்து அதற்கு நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.