Home கலை உலகம் கணவன் அடித்து கொடுமைப்படுத்துவதாக யுக்தா முகி மீண்டும் புகார்: எப்.ஐ.ஆர். பதிவு

கணவன் அடித்து கொடுமைப்படுத்துவதாக யுக்தா முகி மீண்டும் புகார்: எப்.ஐ.ஆர். பதிவு

693
0
SHARE
Ad

மும்பை, ஜூலை 6- முன்னாள் உலக அழகியும் நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் பிரின்ஸ் டுலி மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

coupleyukta-jpg_084601தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கொடுமை மற்றும் துன்புறுத்துதல், இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான டுலி மீது ஏற்கனவே அம்போலி காவல் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார். ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால், நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக டுலி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டம் வென்ற யுக்தா முகி, பின்னர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.