Home இந்தியா பிரதமர் போட்டியில் அத்வானி இல்லை: வெங்கையா நாயுடு

பிரதமர் போட்டியில் அத்வானி இல்லை: வெங்கையா நாயுடு

519
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 19- பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்ததால், மூத்த தலைவர் அத்வானி அதிருப்தி அடைந்தார்.

advani1_350_062013104948கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த அத்வானி, ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் அவரை மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்த 3 நாட்களுக்குப் பிறகு ராம்ஜெத்மலானியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது பேசிய அத்வானி, குஜராத் மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிய மோடியை பாராட்டினார்.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு நேற்று  அத்வானியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, பிரதமருக்கான போட்டியில் அத்வானி இல்லை என்று தெரிவித்தார்.

“பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று அத்வானி எப்போதும் கூறியுள்ளார். இனி அவர் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபடுவார். கட்சியையும் தொடர்ந்து வழிநடத்துவார். கட்சிக்குள் மோடிக்கு போட்டியாக இருந்த ஒரே சாத்தியமான சவால் முடிந்துவிட்டது” என்றார் வெங்கையா நாயுடு.