Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய சுகாதார நிறுவனம் ஒன்றை திறக்க இருப்பதாக கூகுள் அறிவிப்பு

புதிய சுகாதார நிறுவனம் ஒன்றை திறக்க இருப்பதாக கூகுள் அறிவிப்பு

590
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ, செப்டம்பர் 21 – வயதாவதால் தோன்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட சுகாதார நிறுவனம் ஒன்றைத் திறக்க இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

google-glitch-635கேலிகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் ஆப்பிள் மற்றும் ஜெனென்டெக் நிறுவனங்களின் தலைவராக உள்ள ஆர்ட் லெனின்சன் தலைமையின் கீழ் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் கூகுளிலிருந்து தனித்து இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. வயதாவதன் காரணமாகத் தோன்றும் மனப் பிரச்சினைகள், உடல் சுறுசுறுப்பை பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் போன்றவற்றின் மீது இந்த நிறுவனம் கவனம் செலுத்தும் என்று தெரிகின்றது.

#TamilSchoolmychoice

இது ஒரு நீண்டகாலப் பந்தயம் என்பதைத் தெளிவாக உணரமுடிகின்றது. இருப்பினும், சரியான திறமையாளர்களையும், இலக்குகளையும் கொண்டு தகுந்த கால நேரத்தில் செயல்பட்டு வந்தால் விரைந்து முன்னேற்றம் காண முடியும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் லாரி பேஜ் இணையதளத் தகவல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நிறுவனம் நிறுவப்படும் இடம் குறித்தோ, அங்கு பணி புரிய உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறித்தோ மற்றும் இந்த நிறுவனம் இயக்குநர் லாரி பேஜின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரக்கூடும் என்பது குறித்தோ மற்ற விபரங்கள் எதுவும் தற்போது அளிக்கப்படவில்லை.