செப். 20- தமிழ் சினிமாவில் ‘மன்மதன்’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம்.
‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தை தயாரித்து பவர் ஸ்டார் உடன் சேர்ந்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்கள் முன்னணியாக திகழும்பொழுது அவர்களுக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆசை வருவது புதிதல்ல.
இந்த வரிசையில் சந்தானமும் இணைகிறார். அவர் கதாநாயகனாகும் படத்துக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை ஸ்ரீநாத் இயக்குகிறார்.