Home அரசியல் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டி வலுக்கிறது! கைரி உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்!

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டி வலுக்கிறது! கைரி உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்!

499
0
SHARE
Ad

KhairyJamaluddin_ShahrinYahya_2கோலாலம்பூர், செப் 20 – எதிர்வரும் அம்னோ தேர்தலில் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு தற்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் உட்பட நான்கு பேர் போட்டியிடவுள்ளனர்.

ஏற்கனவே கைரியை எதிர்த்து முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளரான சனுசி ஜூனிட்டின் மகன் அக்ராம்ஷியா உபைடா சனுசி கூறியிருந்த நிலையில் தற்போது அப்போட்டியில் மேலும் இருவர் சேர்ந்துள்ளனர்.

இதனால் அப்பதவிக்கு நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மெர்போக் அம்னோ இளைஞர் தொகுதித் தலைவர் கரிம் அலி மற்றும் தாமான் செம்பாகா (சிலாங்கூர்) கிளை இளைஞர் உதவிச் செயலாளர்  சைட் ரோஸ்லி சைட் ஹர்மான் ஜமாலுல்லாய் ஆகிய இருவர் தான் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.