Home அரசியல் நஜிப்பின் 1 மலேசியாக் கொள்கை நீர்த்து விட்டது!நிஜ முகம் வெளிப்பட்டுவிட்டது! – டோனி புவா

நஜிப்பின் 1 மலேசியாக் கொள்கை நீர்த்து விட்டது!நிஜ முகம் வெளிப்பட்டுவிட்டது! – டோனி புவா

554
0
SHARE
Ad

Tony-Phuaபெட்டாலிங் ஜெயா, செப் 20 – வர்த்தக ரீதியில் தொய்வடைந்திருந்த உத்துசான் மலேசியாவிற்கு அதிக விளம்பரங்கள் தருமாறு அரசு துறைகளுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது, பூமி புத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை அறிவித்தது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அண்மையில் செய்த இந்த இரு அறிவிப்புகள் அவரது உண்மை முகத்தை காட்டிவிட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா விமர்சித்துள்ளார்.

அம்னோ சார்பு நாளிதழான உத்துசான் மலேசியாவிற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அச்செய்தி நிறுவனத்தின் தீவிரவாதப் போக்குடன் நஜிப் ஒத்துப்போகிறார் என்றும், பொதுத்தேர்தலில் வாக்களித்த பூமிபுத்ராக்களுக்கு கைமாறாக பொருளாதாரத் திட்டங்களை அறித்து தான் ஒரு இனவாதி என்பதை நிரூபித்துவிட்டதாகவும் டோனி புவா கூறியுள்ளார்.

இதனால் நஜிப்பின் 1 மலேசியாக் கொள்கை நீர்த்துப் போய் விட்டதையும் டோனி புவா குறிப்பிட்டுள்ளார்.