செப். 21- விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘பீட்சா’.
இந்தப் படத்தின் 2-ம் பாகம் ‘பீட்சா 2 தி வில்லா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அசோக் செல்வன்- சஞ்சீதா ஷெட்டி நடித்துள்ளனர். இப்படத்தை சி.வி.குமார், ஸ்டூடியோ கிரீன் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
அதே தேதியில் ‘பீட்சா’ படத்தில் நடித்த விஜய் சேதுபதியின் ‘இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா’ என்ற படமும் வெளியிடப்படுகிறது.
பீட்சா பெயரில் வரும் இரண்டாம் பாகம் முந்திச் செல்லுமா? அல்லது அதில் நடித்த விஜய் சேதுபதியின் படம் முந்திச் செல்லுமா என்பது படம் வெளியான பிறகே தெரியும்.