Home உலகம் ஜெர்மன் பாராளுமன்ற தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் அமோக வெற்றி

ஜெர்மன் பாராளுமன்ற தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் அமோக வெற்றி

491
0
SHARE
Ad

பெர்லின், செப்.23– ஜெர்மனியில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில், பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும், எல்.பி.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

angela-merkel_1463221cநேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

அதை தொடர்ந்து முடிவுகள் வெளியானது. அதில் மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி 42 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தது.

#TamilSchoolmychoice

இவரை எதிர்த்து போட்டியிட்ட எல்.பி.டி. கட்சிக்கு 26 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. இன்னும் ஓட்டு எண்ணிக்கை முடியவில்லை. எனவே, முடிவில் மெர்கல் கட்சி அமோக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சலா மெர்கல் கடந்த 2005 மற்றும் 2009–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று 2–வது தடவை பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவர் 3 தடவை பிரதமர் பதவி ஏற்கிறார். 59 வயதாகும் ஏஞ்சலா மெர்கல் இயற்பியல் வல்லுனர் ஆவார்.

கிழக்கு ஜெர்மனியை சேர்ந்தவர். கடந்த 1989–ம் ஆண்டு பெர்லின் சுவர் இடித்து வீழ்த்தப்பட்டு மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த போது அரசியலுக்கு வந்தார். தற்போது உலகில் உள்ள பலம் வாய்ந்த பெண் மணிகளில் ஒருவராக இவர் திகழ்கிறார்.

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து முன்னாள் பெண் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தார்.

தற்போது, இவர் அவரது சாதனையை தகர்த்து முன்னணியில் உள்ளார்.