செப். 24- ‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் ‘ஜில்லா’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
காதல், குணச்சித்திரம், நகைச்சுவை, சண்டை என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்துவும் இந்த படத்திற்கு ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை இந்தியின் பிரபல பாடகரான சோனு நிஹாம் பாடியுள்ளார்.
இனிமையாக இசையமைத்துள்ள இமான் இப்படத்தில் வைரமுத்துவின் பாடல் இடம்பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Comments