Home நாடு பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்புக்கு ஆன செலவு 2.88 மில்லியன்!

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்புக்கு ஆன செலவு 2.88 மில்லியன்!

654
0
SHARE
Ad

imageகோலாலம்பூர், செப் 24 – ரமலானை முன்னிட்டு பிரதமர் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் கலந்து கொண்ட 80,000 மக்களுக்கு ஆன செலவு 2.88 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் துறை அமைச்சரான ஷாஹிடான் காசிம்  இவ்வாறு எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.

இந்த உணவு விருந்தை குஷி கேட்டரிங் தயாரித்தது என்றும், அதில் கலந்து கொண்ட மக்களுக்கு தலைக்கு 36 ரிங்கிட் செலவானது என்றும் ஷாஹிடான் அதில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

“இது போன்ற திறந்த இல்ல உபசரிப்பு ஒரு நல்ல வழி தான். ஆனால் அது மக்களின் வரிப்பணம் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு அதன் செலவைக் குறைக்க வழி செய்ய வேண்டும்” என்று அந்தோணி லோக் கூறினார்.

மேலும், இது போன்ற திறந்த உபசரிப்பு குத்தகைகளை ஒரே உணவு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் தனித்தனியாக பிரித்து கொடுக்கலாம் அல்லது திறந்த முறையில் ஏலம் மூலம் குத்தகைகளை வழங்கலாம் என்றும் அந்தோணி லோக் ஆலோசனை கூறினார்.

“இது மாதம் முழுவதும் நடக்கும் ஒரு விழா. இதற்கு ஒவ்வொரு அமைச்சர் மற்றும் ஒவ்வொரு அரசு துறைகளும் தனித்தனியாக செலவு செய்யும் பட்சத்தில் கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு செலவாகிறது என்று. ஆகவே இந்த செலவைக் கொஞ்சம் குறைத்தால் எத்தனையோ மில்லியன் சேமிக்கலாம்” என்றும் அந்தோணி லோக் கூறினார்.