பாகிஸ்தான், செப் 24 – பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள 130 ஆண்டு கால பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இத்தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், பைசலா பாத், குஜ்ரன்வாலா, ரகிம் யார்கான், ஐதராபாத், குவெட்டா ஆகிய நகரங்களில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டம் நடத்தினர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.
சிறும்பான்மை மக்களாகிய தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படி அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களின் மத்தியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் சாலைகளில் வாகனத்தின் டயர்கள் கொளுத்தப்பட்டன. கடந்த 1998ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி பாகிஸ்தானில் 23 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமை கோர்ட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். தெருக்கள், ரோடுகள் மற்றும் பொது கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.