Home உலகம் பாகிஸ்தானை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது! 5 சடலங்கள் இதுவரை மீட்பு!

பாகிஸ்தானை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது! 5 சடலங்கள் இதுவரை மீட்பு!

477
0
SHARE
Ad

Pakisatan-Earthquakeசெப்டம்பர் 25 – நேற்று உள்நாட்டு நேரம் மாலை 4.29 மணியளவில் 7.8 அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம் பாகிஸ்தானைத் தாக்கியது. பலுசிஸ்தான் மாவட்டத்தில் உள்ள குஸ்டார் என்ற நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடுமையான நிலநடுக்கத்தின் எதிரொலியாக அண்டை நாடான இந்தியாவின் டில்லி, அகமதாபாத் நகர்களிலும் இலேசான அதிர்வுகள் ஏற்பட்டன.

முழுமையான சேதங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், பாதிக்கபட்ட கட்டிடங்களிலிருந்து இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் விவரங்கள் தொடரும்…)