Home Featured உலகம் ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

971
0
SHARE
Ad

Earthquake-delhiகாபூல் – ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பேரிடரில் இதுவரை 30 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கான் தலைநகர் காபூலில் நேற்று இரவு 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன் காபுல் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நள்ளிரவில் குளிர் நடுங்கியபடி இருந்துள்ளனர்.

30 நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு, இந்தியாவில் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.