Home கலை உலகம் திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

481
0
SHARE
Ad

சென்னை, செப். 25- சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:-

வரலாற்றை மனிதர்கள் தான் படைக்கின்றனர். இந்தியாவில் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் தயாரித்து சாதனை படைத்தார்.

இப்போது, இந்திய திரைத்துறை உலகளாவிய தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு வளர்ந்து வரும் இந்திய திரைத்துறை, உலகின் பெரிய திரைத்துறைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இதேபோல் இந்திய திரை இசையும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

#TamilSchoolmychoice

இந்திய திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகிரெட்டி போன்றோர் சாதனை படைத்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவே திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். அவருக்கு முதல் விருதை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெரும்பாலான தேசிய திரைப்பட விருதுகளை தென்னிந்திய திரைப்படங்கள் தட்டிச்செல்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.