Home கலை உலகம் இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞர்களுக்கு விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞர்களுக்கு விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

528
0
SHARE
Ad

சென்னை, செப். 25- சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று  நடைபெற்றது.

pranab_mukherjee--621x414விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக பங்கேற்றார். தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார்.

#TamilSchoolmychoice

அதன்பின்னர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகைகள் ஸ்ரீதேவி, ரேகா, வைஜெயந்தி மாலா, இயக்குனர் கே.பாலச்சந்தர், மது, அடூர் கோபாலகிருஷ்ணன், மம்முட்டி, மோகன்லால், அமிதாப் பச்சன், கிரண், பி.சாந்தாராம், அம்பரிஷ், விஷ்ணுவர்தன், அஞ்சலிதேவி, இயக்குனர் கே.விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

இதேபோல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்கமொழி, அசாம், போஜ்பூரி உள்ளிட்ட பிற திரைத்துறையினருக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், “வலுவான, மக்களை ஈர்க்கும் சக்தியாக திரைப்படங்கள் திகழ்கின்றன. சமூக நிலை, அரசியல் மற்றும் பொருளாதர சூழலை திரைப்படங்கள் பிரதிபிலிக்கின்றன. இந்திய திரைப்படத்துறை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்துறையை ஊக்குவிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.