Home அரசியல் சின் பெங் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டார் என்பதை மறக்க வேண்டாம் – மகாதீர் கருத்து

சின் பெங் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டார் என்பதை மறக்க வேண்டாம் – மகாதீர் கருத்து

524
0
SHARE
Ad

chinpeng2

கோலாலம்பூர், செப் 25 – மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங், மலேசியாவை ஒரு கம்யூனிஸ்ட் நாடாக ஆக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.

சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்கு கொண்டுவருவதில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்பு குறித்து கருத்து கேட்டபோது அதற்கு பதிலளித்த மகாதீர்,

#TamilSchoolmychoice

“இதில் சர்ச்சை என்ன இருக்கிறது? சின் பெங்கை மலேசியர் என்றே பலர் நினைக்கவில்லை. அவர் மீது பலர் ஆத்திரப்படுவதன் காரணம், சின் பெங் மலேசியாவை ஜனநாயகத்திலிருந்து ஒரு கம்யூனிஸ்ட் நாடாக ஆக்குவதில் குறிக்கோளாக இருந்தார்” என்று மகாதீர் தெரிவித்தார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தில் மகாதீரும் கையோப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஒப்பந்தத்தின் படி, மலேசிய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் தாய்நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சின் பெங் அப்போது மலேசியாவிற்கு திரும்ப விண்ணப்பித்தாரா என்பதை மகாதீர் கூற மறுத்துவிட்டார்.