கோலாலம்பூர், செப் 26 – கம்யூனிஸ்ட் கொள்கைகளை நாட்டில் பரப்ப நினைப்பவர் எவராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய காவல்துறை தலைவர் காலிட் அபு பக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கை முன்வைத்து, கம்யூனிஸ்ட்டை பெருமைப்படுத்தி பேசுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற உள்ளூர்வாசி ஒருவரும், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், கம்முனிஸ்ட் கட்சியின் சின்னங்களையும் நினைவுப் பொருள்களையும், மறைந்த சின் பெங்கின் படங்களையும் வைத்திருந்ததற்காக பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.