Home இந்தியா 81–வது பிறந்த நாள்: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா வாழ்த்து

81–வது பிறந்த நாள்: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா வாழ்த்து

1019
0
SHARE
Ad

சென்னை, செப். 27– பிரதமர் மன்மோகன்சிங் 1932–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். நேற்று  (வியாழக்கிழமை) அவருக்கு 81–வது பிறந்த தினமாகும்.

JAYALALITHAபிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் அவரை  கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

#TamilSchoolmychoice

1818548அதில் அவர் கூறி இருப்பதாவது:–

உங்கள் பிறந்த நாளான, மகிழ்ச்சிகரமான இந்த நேரத்தில், உங்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.