Home கலை உலகம் குழந்தை வளர்ந்ததால் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கிறார்

குழந்தை வளர்ந்ததால் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கிறார்

606
0
SHARE
Ad

செப். 28- ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் 2007–ல் திருமணம் நடந்தது.

raavan premiere 5 170610அதன் பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்தார். இவர்களுக்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘ஆரத்யா’ என பெயரிட்டனர்.

பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. நிறைய படவாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. குழந்தையுடன் முழு நேரமும் செலவிட்டார். உடல் எடையும் கூடியது. தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

#TamilSchoolmychoice

பிரகலாத்தாக்கர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக அவரது கணவர் அபிஷேக்பச்சன் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.

Besides-‘Aishwarya-Rai-And-The-Weight-Loss-Tamasha’-3இதுகுறித்து டைரக்டர் பிரகலாத்தாக்கர் கூறும்போது, ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் எனது படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இந்த படத்தை கவுரங்தோஷி தயாரிக்கிறார். ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் அழகானவர்கள் மட்டுமின்றி திறமையாவர்களும் கூட என்றார் அவர்.