Home 13வது பொதுத் தேர்தல் அம்னோ ஜனநாயக கட்சி என்பதற்கு வெளிப்படையான தேர்தலே சான்று – நஜிப் பெருமிதம்

அம்னோ ஜனநாயக கட்சி என்பதற்கு வெளிப்படையான தேர்தலே சான்று – நஜிப் பெருமிதம்

550
0
SHARE
Ad

NajibRazakMay15-621x347கோலாலம்பூர், அக் 14 – வெளிப்படையான அம்னோ தேர்தல் மூலம் தமது கட்சி ஜனநாயகமிக்கது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

“2 லட்சத்து 50 ஆயிரம் பேராளர்கள் மற்றும் 33 ஆயிரத்து 12 வேட்பாளர்களை உட்படுத்திய இத்தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கட்சி அமைப்பு சட்டவிதிகளில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் சரியான முடிவு என்பதோடு கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

“இன்றைய இரவு அம்னோவிற்கு வரலாறு பொதிந்த ஒரு தினமாகும். கட்சியில் உருமாற்றத்தை ஏற்படுத்தும் பணி கடந்த 2009 ஆம் ஆண்டு மாநாட்டின் போது தொடங்கியது. இங்கு தான் கட்சியின் அமைப்பு சட்டவிதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது” என்று புத்ரா உலக வாணிப மையத்தில் அம்னோ இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி அணியினரின் தேர்தல் நடவடிக்கை மீதான விளக்கத்தைச் செவிமடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் நஜிப் பேசினார்.

#TamilSchoolmychoice

“வெளிப்படையான ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட ஒரு கட்சியாக அம்னோ திகழும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இன்று இது அமைந்துள்ளது” என்று நஜிப் அப்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நஜிப்புடன், துணைப்பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோர், தேர்தல் குழு தலைவர் டான்ஸ்ரீ தாஜோல் ரோஸ்லி கசாலி மற்றும் தகவல் பிரிவு தலைவர் டத்தோ அகமது மஸ்லான் ஆகியோரும் உடன் காணப்பட்டனர்.

தேர்தலின் போது ஆங்காங்கே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்ததை ஒப்புங்கொண்ட பிரதமர் நஜிப், அதையும் கடந்து தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றதற்கு பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கட்சி மற்றும் உச்சமன்றத்தின் சார்பில் தானும், துணைத்தலைவரும் நன்றி கூறுக்கொள்வதாக நஜிப் தெரிவித்தார்.