இந்த வருடத்தின் மிகப் பெரிய படமாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படும் ‘ஆரம்பம்’ படத்துக்கான பின்னணி இசை வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், டைரக்டர் விஷ்ணுவர்த்தனும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்களாம்.
இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு 2 நாட்கள் முன்பாக அதாவது இந்த மாதம் 31- ஆம் தேதியோ அல்லது தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 1-ஆம் தேதியோ ஆரம்பம் படம் கண்டிப்பாக வெளியீடு காண்கிறது. படம் இன்னும் தணிக்கை ஆகாததால் அதற்கு முன்பாக ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருக்கிறார் டைரக்டர் விஸ்ணுவர்தன்.
பில்லா படத்தைப் போலவே அஜீத் ரசிகர்களை கவரும் விதமாக படம் ஸ்டைலிஷாக இருப்பதாக கூறப்படுகிறது. கதாசிரியர்கள் சுபா மற்றும் டைரக்டர் விஷ்ணுவர்த்தனின் வேகமான, நேர்த்தியான கதை மற்றும் காட்சியமைப்புகளும் படத்துக்கு மேலும் மெருகூட்டவிருக்கின்றது. எனவே இந்த வருட தீபாவளி ஆரம்பமே அமர்க்களமான ஆரம்பமாக இருக்கும் என்ற நம்பிக்கையோட காத்திருக்கிறது ‘ஆரம்பம்’ தயாரிப்பு குழுவினர்.