ஆக. 31- அஜித்தை வைத்து ‘பில்லா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் மீண்டும் இணையும் படம் ‘ஆரம்பம்’.
இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால், தற்போது அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.
‘தலைவா’, ‘சிங்கம்-2’ ஆகிய படங்களைவிட இந்த படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத்தின் திரையுலக பயணத்திலேயே ‘ஆரம்பம்’ படத்தின் திரையரங்கு உரிமைதான் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் சென்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து படமும் வசூலில் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.