Home உலகம் வெள்ளை மாளிகையில் மலாலாவுக்கு ஒபாமா நேரில் வாழ்த்து

வெள்ளை மாளிகையில் மலாலாவுக்கு ஒபாமா நேரில் வாழ்த்து

514
0
SHARE
Ad

Malala-Yousafzai_2700395bவாஷிங்டன், அக் 14- பாகிஸ்தான் சிறுமியான மலாலா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவரது அழைப்பின் பேரில் நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது மலாலாவின் துணிச்சலான செயல்களைப் பாராட்டினார் ஒபாமா.

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியான மலாலா பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வருபவர். இதனால் தாலிபன்களின் வெறுப்பைச் சம்பாதித்த மலாலா, கடந்தாண்டு தாலிபன்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டனில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். ஆனாலும், மலாலா கொல்லப்பட வேண்டியவர் என தாலிபன்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பின் பேரில் நேற்று வெள்ளை மாளிகையில் ஒபாமாவைச் சந்தித்தார் மலாலா. அப்போது ஒபாமாவின் மனைவி மிக்கேல் ஒபாமாவும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பின் போது, உயிரைத் துச்சமென மதித்து தொடர்ந்து பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார் ஒபாமா.