Home உலகம் மலாலாவைக் கொல்ல முயன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை -பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!

மலாலாவைக் கொல்ல முயன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை -பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!

680
0
SHARE
Ad

malala3-600இஸ்லாமாபாத், மே 2 – பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய இளம் போராளி மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஆனால் முக்கிய குற்றவாளி இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய்.

கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்துவந்த இவர் தலிபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

#TamilSchoolmychoice

இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி பள்ளிக்கூட பருந்தில் மலாலா பயணம் செய்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. பின்னர் அவர் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற மலாலா தலிபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.

இருப்பினம் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெண் கல்விக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மாணவி மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே மலாலா துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றம் 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.

இருப்பினும் மலாலா சுடப்பட்ட விவகாரத்தில் போலீசாரா அடையாளம் காணப்பட்டவன் அதுல்லா கான் எனும் தீவிரவாதி. இவனது பெயர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.