Home நாடு வான் அசிசா ஹூடுட்டுக்கு ஆதரவு – பாஸ் தகவல்

வான் அசிசா ஹூடுட்டுக்கு ஆதரவு – பாஸ் தகவல்

458
0
SHARE
Ad

பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 2 – பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஹூடுட்டுக்கு ஆதரவு தெரிவித்ததால், தாங்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பாஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கூபாங் செமாங் தொகுதி பாஸ் கட்சித் தலைவர் சுஹைமி ஹாருன் கூறுகையில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் தான் ஹூடுட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நான் வான் அசிசாவுடன் கலந்தாலோசித்தேன். முஸ்லிம்கள் ஹூடுட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்”என்று தெரிவித்துள்ளார்.

Wan-Azizah

#TamilSchoolmychoice

மேலும், ஹூடுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு பிகேஆர் மன்னிப்பு கேட்காது என அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளது பற்றி சுஹைமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர்கள் ஊடகங்களின் செய்திகளை கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் நேரடியாக கேட்பதை மட்டுமே நம்புகின்றோம். வான் அசிசாவையும், அவரது கணவர் அன்வார் இப்ராகிமையும் எங்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும்” என்றும் சுஹைமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் தொகுதி பாஸ் கட்சி, ஹூடுட்டை எதிர்த்ததற்கு பிகேஆர் மன்னிப்பு கோரும் வரை தாங்கள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கப் போவதில்லை என முடிவெடுத்தது.

ஆனால், ஒரு வாரத்திற்கு பின்னர், பாஸ் கட்சித் தலைமையகத்திலிருந்து பிகேஆருக்கு ஆதரவு அளிக்கும் படி வந்த நெருக்கடியினால் தன் நிலையில் இருந்து மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வரும் மே 7ஆம் தேதி பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிகேஆர் சார்பில் அக்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா களம் இறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து தேசிய முன்னணியின் சுஹைமி சாபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர்.