Home இந்தியா ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

563
0
SHARE
Ad

dd-vs-kxipபுதுடெல்லி, மே 2 – நேற்று மாலை டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 31-ஆவது ஐ.பி.எல்.லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டுமினி முதலில் பஞ்சாப் பேட் செய்ய அழைத்தார். முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 13.5 ஓவர்களிலேயே எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.

#TamilSchoolmychoice