Home அவசியம் படிக்க வேண்டியவை கமலின் ‘பாபநாசம்’ பட முன்னோட்டம் வெளியீடு!

கமலின் ‘பாபநாசம்’ பட முன்னோட்டம் வெளியீடு!

559
0
SHARE
Ad

papanaasamசென்னை, மே 2 – உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம். இரண்டாண்டுகளுக்கு முன்பாக மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றி படம் ‘திரிஷ்யம்’.

இதே படத்தை இப்போது தமிழில் மறுபதிப்பகம் செய்திருக்கிறார்கள். இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி, கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார். ‘வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ்’ சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

ஏற்கெனவே பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ‘பாபநாசம்’ படத்தின் முன்னோட்டம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பாபநாசம்’ பட முன்னோட்டம்: