Home வணிகம்/தொழில் நுட்பம் ஐபோன் 5எஸ், 5சி விற்பனை! மேக்சிஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

ஐபோன் 5எஸ், 5சி விற்பனை! மேக்சிஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

1500
0
SHARE
Ad

img_invitation (1)கோலாலம்பூர், அக் 14 – ஆப்பிள் நிறுவனத்தில் சமீபத்திய தயாரிப்பான ஐபோன் 5எஸ் மற்றும் 5சி ஆகியவை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் மலேசியாவில் விற்பனைக்கு வருகிறது.

இது குறித்து மலேசியாவின் முதன்மை தொலைத் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் தனது வாடிக்கையாளர்களைக் கவர புதிய அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.

அதன் படி, வாடிக்காளர்கள் மேக்சிஸ் நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு சென்று தங்களது விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஐபோனை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று மேக்சிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு கீழ்காணும் இணைய வழித் தொடர்ப்பைப் பயன்படுத்தவும்

https://iphone.maxisdevices.com/ROI/