Home நாடு “நஜிப்பின் பூமிபுத்ரா திட்டமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் ஒன்று தான்” – சீன வணிகக் கூட்டமைப்பு...

“நஜிப்பின் பூமிபுத்ரா திட்டமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் ஒன்று தான்” – சீன வணிகக் கூட்டமைப்பு கருத்து

425
0
SHARE
Ad

200x270x0687a88bc5055541e2f0471c2a59bd14.jpg.pagespeed.ic.ZwNR1HIb_Fகோலாலம்பூர், அக் 17 – அண்மையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் அறிவிக்கப்பட்ட பூமிபுத்ராக்களுக்கான பொருளாதார முன்னேற்றத் திட்டமும் (Bumiputera Economic Empowerment) கடந்த 1970 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் ஏறக்குறைய ஒன்று தான் என்று நாட்டின் மிகப் பெரிய சீன வணிகக் கூட்டமைப்பு கூறுகிறது.

இது குறித்து மலேசிய சீன வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு (எசிசிசிஐஎம்) தலைவர் லிம் கொக் சியோங் கூறுகையில், “பூமிபுத்ராக்களுக்கான பொருளாதாரத் திட்டமும், முந்தைய புதிய பொருளாதாரக் கொள்கையும் ஒன்று தான். புதிய பொருளாதாரக் கொள்கை கடந்த 43 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது போன்ற திட்டங்கள் பூமிபுத்ராக்களை ஏழ்மை நிலையிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். அப்படியானால் இத்தனை வருடங்களில் இன்னும் ஏன் பல மலாய்காரர்கள் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்” என்று இன்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அரசாங்கம் வெளிப்படையாகவும், அனைவருக்கும் பொதுவாகவும் நடந்து கொண்டு அனைத்து இனங்களும் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் லிம் கோக் கூறியுள்ளார்.