Home தொழில் நுட்பம் உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது!

உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது!

719
0
SHARE
Ad

Facebook-featureஅக்டோபர் 21 – இன்று எதிர்பாராத விதமாக உலகம் முழுமையிலும் முகநூல் தொடர்புகள் நிலைகுத்தியதைத் தொடர்ந்து, அதனை பயன்படுத்துபவர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் தாங்கள் விரும்பிய தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

#TamilSchoolmychoice

தங்களின் நிலைப்பாட்டை (status) தெரிவிக்க முடியாமல் பலர் தவித்தனர். பதிவேற்றம் செய்ய முற்பட்ட போது “உங்களின் நிலைப்பாட்டை திருத்தங்கள் செய்து பதிவேற்றம் செய்வதில் தவறு உள்ளது” என்ற அர்த்தத்தில் (“there was an error updating your status.”) வாசகங்கள் பதிலாகக் கிடைத்தன.

இருப்பினும் கட்டம் கட்டமாக முகநூல் சேவைகள் வழக்கமான நிலைமைக்கு திரும்பினாலும் இன்னும் பல நாடுகளில் முகநூல் சேவைகள் நிலைகுத்தி இருப்பதாக இணையத் தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகளையும் சில சமயங்களில் புகைப்படங்கள் போன்றவற்றையும் பயனீட்டாளர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலைமை தொடர்கின்றது.

இருப்பினும், முகநூல் அகப்பக்கத்தை திறப்பதில் அநேக நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தற்போது முகநூல் வழக்க நிலைமைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இன்று முகநூல் தொடர்புகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகநூல் நிறுவனம் இதுவரை விளக்க அறிக்கை எதனையும் வழங்கவில்லை.