Home தொழில் நுட்பம் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் செல்பேசி பயன்படுத்தும் பழக்கம்! பெற்றோர்கள் உளவு பார்க்கும் நிலைமை!

குழந்தைகளிடம் அதிகரித்து வரும் செல்பேசி பயன்படுத்தும் பழக்கம்! பெற்றோர்கள் உளவு பார்க்கும் நிலைமை!

611
0
SHARE
Ad

children-smartphoneகோலாலம்பூர், அக் 22 – ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஆபாச விளம்பரங்களையும், காட்சிகளையும் தங்களது பிள்ளைகள் பார்த்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் பெற்றோர் தற்போது பிள்ளைகள் பயன்படுத்தும் திறன்பேசிகளையும் சோதனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர் என்று நியூ ஹாரிஸ் இண்டெராக்டிவ் போல் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

8 முதல் 12 வயது வரையிலான 65 சதவிகித அமெரிக்க குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தங்களது பெற்றோர் தங்களது திறன்பேசிகளை சோதனை செய்வதாகக் கூறியுள்ளனர். அதில் சிலர், தங்களது பெற்றோர், தாங்கள் எங்கு போகிறோம் என்பதை திறன்பேசிகளின் வழி நோட்டம் விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

17 வயதினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 43 சதவிகித பிள்ளைகள் தங்களது பெற்றோர் திறன்பேசிகளை சோதனை செய்வதாகவும், 35 சதவிகித பிள்ளைகள் தங்களது பெற்றோர் தங்களுக்குத் தெரியாமலேயே திறன்பேசிகளை சோதனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதில் சில பெற்றோர், திறன்பேசிகளின் மூலம் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை தங்களது பிள்ளைகளுக்குத் தெளிவாக விளக்கமளித்துள்ளனர். 19 சதவிகித பெற்றோர் தங்களது பிள்ளைகள் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு காலம் நேரம் வரையறுத்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

12 வயதிற்கும் குறைவான பல பிள்ளைகள் தங்களது திறன்பேசிகளுக்கு ரகசிய எண்கள் வைத்துள்ளனர். அதில் ஒரு சிலரே தங்களது பெற்றோரிடம் அந்த எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஹாரிஸ் நடத்திய ஆய்வின் படி, 13 முதல் 17 வயது வரையிலான 19 சதவிகித பிள்ளைகள் செல்பேசிகளை தகவல்களை அனுப்பவும், பெறவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். 18 சதவிகித பிள்ளைகள் வதந்திகளைப் பரப்ப பயன்படுத்துகின்றனர். 8 முதல் 17 வயது வரையிலான 6 சதவிகித பிள்ளைகள் செல்பேசிகளை ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 2,286 பருவ வயதினரிடமும், 1,217 அமெரிக்க குழந்தைகளிடமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.